5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  பப்படத்தை எடுத்து சாப்பிட்டதற்கு நெருப்பால் சுட்டதாய் கைது

Date:

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர்  குடியிருப்பு பகுதியில் 08.10.2021  அன்று சிறுமிக்கு  நெருப்பால்  சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
தாயார் சமைத்து வைத்த உணவின்  பப்படத்தை தனது 5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  எடுத்துசாப்பிட்ட காரணத்தினால்  தாயார் பெற்ற குழந்தைக்கு  வாய்பகுதியில்  நெருப்பால் சுட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின்    பேரன் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலிற்கமைய தாயார்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 09.10.2021 இன்றையதினம் சிறுமி கிளிநொச்சி  வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின்  தந்தை   தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.
அக்கரையான்   பொலிசார்  மேலதிக விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  இதேவேளை இன்றையதினம் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார்  தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...