இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது இறுதியுமான டி 20 போட்டியில் இலங்கை அணிக்கு 160 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஓமான் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஓமான் அணி சார்பில் Kashyap Prajapati அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.