விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக கலந்துரையாட தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் வாரத்தில் கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.