இலங்கையிலிருந்து குஷிநகருக்கு 100 பிக்குகளுடன் முதல் விமானம் புறப்பட்டது

Date:

இன்று (20) திகதி இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம்  திறந்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது.

புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த இடமாக குஷிநகர் உள்ளது.2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமைய வேண்டும் என அறிவித்திருந்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையிலான இலங்கையைச் சேர்ந்த பேராளர்கள் குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணிக்கவுள்ளது.

இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 பிக்குகளுடன்  இந்த விசேட விமானம் குஷிநகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...