T20 Highlights : ” சுப்பர் 12″ சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்தது அவுஸ்திரேலியா!

Date:

அப்ரா அன்ஸார்.

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் ” சுப்பர் 12″ சுற்று போட்டிகள் இன்றைய தினம் (23) ஆரம்பமானது. முதலாவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் அபூதாபி ஷெய்க் ஸெய்ட் மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ஓட்டங்களை 34 பந்துகளில் பெற்றுக் கொண்டார்.தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளையும் ,கசிசோ ரபாடா , கேசவ் மகராஜ் மற்றும் தப்ரிஸ் ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் ஜோஜ் ஹெசில்வூட்( 2/19), மற்றும் மிச்சல் ஸ்டார்க் ( 2/31) , எடன் ஜாம்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இரண்டாவது போட்டியாக தற்போது இங்கிலாந்து மற்றும் மேற்கந்திய தீவுகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...