T20 Highlights : “சூப்பர் 12” இன் இரண்டாவது போட்டியில் அபார வெற்றியை நிலைநாட்டியது இங்கிலாந்து!

Date:

அப்ரா அன்ஸார்

இருபதுக்கு இருபது உலக்கிண்ணத் தொடரின் “சூப்பர் 12” போட்டிகளின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.இப் போட்டி டுபாயில் இடம்பெற்றது.இதில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார‌ வெற்றியை நிலை நாட்டியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுக்கள் ஆரம்பம் முதலே மலமலவென சரிய 14.2 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.மேற்கத்திய தீவுகள் சார்பில் கிரிஸ் கெயில் மாத்திரம் அதிகபட்சமாக 13 ஓட்டஙக்ளைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் ஒன்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வௌியேறினர்.இங்கிலாந்தின் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 56 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

56 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

மேற்கத்திய தீவுகள் அணியின் சார்பில் அகேல் ஹொசைன் 2/24 , ரவி ராம்பால் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இன்றைய வெற்றியுடன் குழு 1 இல் 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...