இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!

Date:

கடந்த 24 ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐ.சி.சி இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியை முழு உலக கிரிக்கெட் இரசிகர்களும், ஜாம்பவான்களும் கொண்டாடியிருந்தனர்.இந்தியாவின் தோல்வி பாரிய ஏமாற்றத்தை அந்த அணியின் இரசிகர்களுக்கு அளித்திருந்தது.இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள மருத்துவ கல்லூரியின் மாணவர்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) பொலிஸாரினால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வெற்றியை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகியது.கரண் நகர் மற்றும் செளரா காவல் நிலையங்களில் அரச மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்கிம் செளரா கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீம் குஹேமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் மீதான UAPA குற்றச்சாட்டுகள் கடுமையான தண்டனையாலும் இது அவர்களின் எதிர்காலத்தை அழித்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும் , நாங்கள் அவர்களின் செயலை நியாயப்படுத்த வில்லை . ஆனால் இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் என்றார்.மற்றுமொரு சம்பவமாக வட்ஸப்பில் ஸ்டேட்ஸ் ஆக பாக்கிஸ்தான் வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆசிரியர் ஒருவர் பதி விட்டார்.இதையடுத்து நபீசா அட்டாரியை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.மேலும் அவர் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நபீசா தெரிவிக்கும் போது, நான் இந்தியர் , இந்தியா மீது பெரும்பற்று வைத்து உள்ளேன்.ஜொலிக்காக பதிவிட்ட விடயம் விவகாரமாக மாறியுள்ளது.யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.அத்தோடு இந்தியாவின் தோல்வியினை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இருந்த போதிலும் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அங்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.விளையாட்டையும் , அரசியலையும் வித்தியாசமாக பார்க்க வேண்டிய போதும் இவ் இரண்டையும் கலந்து அவற்றில் இன‌ துவேசத்தை வெளிப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது.இந்தியா வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்தாலும் ஒரு பக்கம் வறுமையிலும் திண்டாடுகின்றது எனவே இவ்வாறான செயற்பாடுகளால் மக்களிடையே மேலும் குரோதம் வளருமே தவிர குறையாது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...