குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 2 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் 6 காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபராக பிரசாத் ரணசிங்க, அப் பதவியில் உள்ள நிலையில் காவல்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.அத்துடன் காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா நுவன் வெதசிங்க அப் பதவிக்கு மேலதிகமாக மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் , பிரதிக் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.