மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.16,000 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ( 31) மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 50% பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.கடந்த காலத்தை போலவே தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஒரு வருடகாலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழமையான நேரங்களுக்கு அமைய ( நாளை 01) முதல் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன . எவ்வாறாயினும் அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு பொதுமக்கள் வழியுறுதிப்பட்டுள்ளனர்.