பிற்போடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை,O/L , A/L பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை

Date:

கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை

2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

• 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை
2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை

• கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை
2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை

• கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை
2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 யூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...