டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

Date:

நாட்டில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.அதிலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68% ஆகும்.டெங்கு நோய் அதிகளவு பதிவாகியுள்ள மாவட்டங்களாக கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கொவிட் தொற்றுடன் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத போதிலும் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன் பாடசாலை சூழலை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ,விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இதேவேளை டெங்கு நோயால் இவ்வருடம் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த வருடத்தில் இதுவரையில் 21,646 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...