நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

Date:

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...