எனக்கு நடந்த கொடுமை இனி சிறுபான்மை தலைமைக்கு நடக்க கூடாது | றிசாட்

Date:

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்ப்னருமான றிஷாத் பதுர்தீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்க்ள அறிவார்கள்.
எந்த பயங்கரவாதத்தோடும் அனுவலவும் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள். இந்த விடயத்தினை தெளிவாக சொன்னோம். கட்நத நல்லாட்சியில் விசாரணை நடந்த பொழுது அமைச்சு பதவயை விலகுமாறு அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருக்க அவர் மரணித்து விடுவார் விலகுங்கள் என்று பல அழுத்தங்கள் கொடுக்க அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகி நியாயமான விசாரணைக்கு வழி கொடுத்தோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது என்னை மூன்று முறை அழைத்து புலனாய்வினர் விசாரித்தார்கள். ஆனால் உண்மையான பதிலை வழங்கிய பொழுதும் சாதாரண நபருக்கு நடக்கூடாத அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டவனாக எனது மனைவி பிள்ளைகள் உறங்கிய அறைக்குள் பலவந்தமாக வந்தார்கள். எனது கதவு மூடிக் காணப்பட்ட நிலையில் மதிலால் பாய்ந்து உள்ளே வந்தார்கள்.
ஒரு பெரிய மாபியா தலைவரை கைது செய்வது போன்று நடந்து கொண்டார்கள். அதன் பின்னர் ஆறு மாதம் சிறையில் இருந்தேன். இந்த நிலைமை யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக கடந்த காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு கீழே கைது செய்த வரலாறு கிடையாது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீஎஸ்பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.
எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...