T20 Semi Updates: அவுஸ்திரேலியா அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; போட்டி தொடர்கிறது!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தற்போது டுபாய் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 67, பாபர் அசாம் 39ஓட்டங்களையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 55 ஓட்டங்களை பக்ஹர் சமான் பெற்றுக் கொடுத்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் மற்றும் ஸம்பா தலா 1 விக்கெட்டுகளையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.அவுஸ்திரேலியா அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி தற்போது 1 ஓட்டத்துக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...