கல்முனை சாஹிரா மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

Date:

(பொலிவேரியன் நிருபர் -எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

12 தொடக்கம் 18 வயதுப் பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் தரம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த இம் மாணவன், பல முன்னணிப் பாடசாலைப் போட்டியாளர்களைப் பின்தள்ளி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

வெற்றி பெற்ற இம் மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர், பகுதித் தலைவர், வகுப்பாசிரியர் திருமதி எம்.ஆர்.எப். இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு பாடசாலை கல்விச்சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...