அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இன்று (21) இலங்கையை வந்தடைந்தார்.
இவர்களை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப சுவாமி, கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி , கலாநிதி அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் அவரை வரவேற்றனர்.
கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜகத் குமார மற்றும் பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர் மலர் மாலை அணிவித்து வறவேற்றதுடன், அருஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் அல்-ஹாஜ் முஹ்யித்தீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து வரவேற்றனர்.
உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit