களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, நாளை மறுதினம் (25) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் 10 மணிநேர நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  அறிவித்துள்ளது.

அதற்கமைய வாதுவ, வஸ்கடுவ,பொம்புவல, மக்கொன, பேருவளை, தர்கா நகர்,பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, பெந்தொட்ட, பயாகல, அழுத்கம, பெலவத்த, களுவமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒன்றிணைந்த நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய திருத்த பணிகளின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...