புதிய உருமாறிய கொவிட் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதனால் இங்கிலாந்து 06 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
புதிய வகை கொவிட்டை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் பாதிப்பு, தடுப்பூசி சிகிச்சை முறைகள் அது பரவும் வேகம் போன்றவை இன்னும் தெளிவாகவில்லை. இதனால் மேலும் ஆய்வுகள் தேவை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தற்காப்பு நடவடிக்கையாக இன்று (26) நண்பகல் முதல் 6 ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.
பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.