பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடப்பதே எனது இலக்கு- திமுத் கருணாரத்ன!

Date:

பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடப்பதே தனது இலக்கு என்றும், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆவலுடன் இருப்பதாகவும் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.காலி சர்வதேச மைதானத்தில் மே.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் முதல் இன்னிங்சில் 147 ஓட்டங்களையும் , இரண்டாவது இன்னிங்சில் 83 ஓட்டங்களையும் தலைவர் திமுத் கருணாரத்ன பெற்றுக் கொண்டார்.இலங்கை கிரிக்கெட் வீரர்களில் குமார் சங்கக்காரா 12,400 மற்றும் மகேல ஜயவர்தன 11,814 மட்டுமே இதுவரை 10,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளனர்.தற்போது திமுத் கருணாரத்ன மொத்தமாக 5,406 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார்.அவர் இந்த வருடத்தில் 854 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன், சராசரி 77.63 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...