1947 நவம்பர் 29. பலஸ் தீனத்தை துண்டாடும் ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றம் : நீதி மரணித்தது : அராஜகம் தலைவிரித்தாடியது : ஐக்கிய நாடுகள் அதன் ஆன்மாவை இழந்தது!

Date:

74 வருடங்களுக்கு முன் 1947 நவம்பர் 27ல்அமெரிக்க ஜனாதிபதி ட்ரோமன் தலைமையில்அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதிக்கவாத சக்திகள் ஐக்கிய நாடுகள் சபையை அச்சுறுத்தி பலஸ்தீனத்தை துண்டாடும் தீர்மானத்தை நிறைவேற்றின.வன்முறையாளர்களானபுலம்பெயர்ந்த யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஐக்கிய நாடுகள் சாசனத்தை முற்று முழுதாக மீறியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித வரலாற்றில் இது மிகவும் இருள் சூழ்ந்த தினமாகும். சர்வதேச நீதி, தார்மிக விழுமியங்கள் மனிதப் பெறுமானங்கள் எல்லாமே குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தினமாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கின் அமைதியை குலைக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டன் போட்ட நீண்டகால திட்டத்தின் விளைவே இதுவாகும். பின்னர் அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேல் நடத்திய சட்ட விரோத யுத்தங்களும், மனித குலத்துக்கு எதிரான படுகொலைகளும் மற்றும் அத்துமீறல்களும் பிரிட்டனின் திட்டம் நிறைவேற்றப்பட்டதை பறைசாற்றி நின்றன. அன்று முதல் இன்று வரை மத்திய கிழக்கு ஒரு கொலைகளமாகவே காட்சியளிக்கின்றது.

இவ்வாறே எல்லா காரியங்களும் நடந்து கொண்டிருக்கையில் கடந்த நூற்றாண்டின் கடைசியில் இன்றைய இஸ்ரேல் துருக்கிப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அந்தப் பிராந்தியத்தில் 1896ல் சனத்தொகையில் 95 வீதமானவர்கள் அராபியர்கள்.இவர்களுள் 90 சத வீதமானவர்களிடம் தான் அன்றைய அந்த நிலப்பரப்பின் பல சொத்துக்கள் இருந்தன. அது உலகின் மிகவும் அமைதியான ஒரு பிரதேசம்.அங்கு வாழ்ந்த மக்கள் மிக அரிதாகவே சத்தமிட்டுப் பேசுவார்கள். கெட்ட சம்பவங்கள் அங்கு இடம்பெற்றதாக கேள்வி படுவது கூட மிக அரிதாகவேஇருந்தது.

1987ல் சுவிட்ஸர்லாந்தின் பேசில் நகரில் இடம்பெற்ற உலகின் முதலாவது சியோனிஸ யூத மாநாட்டில் பலஸ் தீனத்தில் யூத ராஜ்ஜியத்தை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பத்தாண் டுகள் கழித்து 1907ல் லண்டனில் இடம்பெற்ற காலணித்துவ மாநாட்டில் பிரிட்டன் விரோதப் போக்கு அணி ஒன்றை உருவாக்கியது. மத்திய கிழக்கில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு அந்த அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பொதுவான சதித் திட்டம் தான் பிரிட்டனையும் சியோனிஸ யூத சக்திகளையும் ஓரணியின் கீழ் கொண்டு வந்தது. இவை ஒன்றாக இணைந்து தான் முதலாவது உலக மகா யுத்தத்தின் போது துருக்கிப் பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தன. அதன் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி 1917ல் பலஸ்தீனப் பிராந்தியம் பிரிட்டனின் ஆதிக்க அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.பலஸ்தீனர்களை தமது சொந்த தாயக பூமியிலிருந்து விரட்டியடித்து விட்டு நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த நயவஞ்சக யூதர்களை அங்கு கொண்டு வந்து உலக சட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு பலஸ்தீன பூமியில் குடியமர்த்த இது வழியமைத்தது.

எதிர்பார்த்தபடி நிராயுதபாணிகளான பலஸ்தீன மக்கள் இதை எதிர்த்தனர்.ஆனால் யூதர்கள் மிகவும் திட்டமிட்டபடி ஹகானா, ஸ்டேர்ன், இர்குன்,ஸ்வாய்லுமி ஆகிய பெயர்களைக் கொண்ட பயங்கரவாத குழுக்களை நிறுவி பலஸ்தீனர்களை நசுக்கினர். மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் போன்றவர்கள் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அதன் மூலம் அவர்கள் நவீன உலக பயங்கரவாத்தின் ஞானத் தந்தைகளானர்.பலஸ்தீன கிராமங்களை சூறையாடி அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை வயது,பால் வித்தியாசங்கள் எதுவும் இன்றி வெறித்தனமாக வேட்டையாடினார். இந்த வெறித்தனமிக்க கயவர்களை இஸ்ரேலிய மக்கள் பிற்காலத்தில் தமது பிரதமர்களாகவும் தெரிவு செய்தமை கேவலத்தின் உச்ச கட்டமாகும்.

பலஸ்தீனர்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டமெனாச்சம் பெகின் நூற்றுக்கணக்கான அப்பாவி பலஸ்தீன ஆண்கள்,பெண்கள், மற்றும் சிறுவர்களைக் கொன்று குவித்தார். ஜெரூஸலம் நகரிலிருந்து சில மைல் தூரத்தில் அலமந்துள்ள டேர்யாஸின் கிராமத்தில் மட்டும் 254 அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உதவிகள் எதுவும் இன்றி நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்ட பலஸ் தீனர்கள் சில இடங்களில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு துணிச்சலாக எதிர்த்து நின்றனர். ஆனால் பிரிட்டிஷ் பேரரசு இஸ்ரேல் கொலைகாரர்களுக்கு உதவிக் கரம் நீட்டி பலஸ் தீனர்களை நசுக்கியது.

அச்சத்துக்கு உள்ளான பலஸ்தீனர்கள் வேறு வழியின்றி அகதி முகாம்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்களுள் பலர் இன்னும் அண்டை நாடுகளில் அந்த அகதி முகாம்களில் தான் மிக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

போதியளவு யூதர்கள் இந்தப் பகுதிக்குள் இறக்குமதி செய்யப்பட்டதும் ஐ,நா மேற்பார்வையில் பலஸ் தீனம் துண்டாடப்பட்டது.ஐ.நா தீர்மானத்தால் தைரியம் ஊட்டப்பட்ட யூதர்கள் பலஸ்தீன அப்பாவி அரபு மக்களுக்கு எதிராகப் பல படுகொலைச் சம்பவங்களை புரிந்தனர். இன்றும் அது தொடருகின்றது. இன்று போல் தான் அன்றும் அமெரிக்கா இந்த யூத பயங்கரவாத குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்களைத் தாராளமாக வழங்கியது.

சியோனிஸவாதிகள் மேற்கொண்ட படுகொலைகளின் நடுவே 1948 மே 14ல் இஸ்ரேல் என்ற நாடு பிரகடனம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மூலம் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பிரப்பிலும் பார்க்க அதிகளவு பரவலான ஒரு நிலப்பரப்பில் இந்த நாடு உருவாக்கப்பட்டது.

கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற சக்திகளின் விளைவாகத்தான் இந்த நாடு உருவானது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள், கோட்பாடுகள், சாசனம் மற்றும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் என் பவற்றை முற்றாக மீறும் வகையில் தான் இந்த நாடு உருவாக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் கீழ் தான் இஸ்ரேல் இன்றும் தனது இருப்புக்கானஉரிமை கோரலை விடுத்த வண்ணம் உள்ளது. யூத நாடு பிரகடனம் செய்யப்பட்டு பதினைந்து நிமிடங்களில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் அதைத் தொடர்ந்து ரஷ் யாவின் கிரம்ளின் மாளிகையும் தமது அங்கீகாரத்தை வழங்கின. இந்த அங்கீகாரமானது இந்த நாட்டின் உருவாக்கத்துக்கு இவை பின்னணியில் செயல்பட்ட பிரதான சக்திகள் என்பதை உலகுக்கு தெளிவாக உணர்த்தியது.இவ்வாறு சட்டவிரோதமாக மனித விழுமியங்களை மீறி இந்த நாடு உருவாக்கப்பட்ட போதிலும் அன்றைய நிலையில் அரபு மக்கள் தான் அங்கு பெரும்பான்மையாக இருந்தனர். 1,008,900 ஆக இருந்த மொத்த சனத்தொகையில் 509,780 பேர் அரபிகளாகவும், 499,020 பேர் யூதர்களாகவும் காணப்பட்டனர்.

அன்று முதல் தனது தொடர் படுகொலைகளாலும், காட்டுமிராண்டித் தனத்தாலும், ஆக்கிரமிப்புக்களாலும் மத்திய கிழக்கை இஸ்ரேல் கொலைகளமாக மாற்றியது. இதுவரை பலஸ்தீன அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட சுமார் 65 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.1970 களின் நடுப்பகுதியில் சியோனிஸம் ஒருவகை இனவாதம் என ஐ.நா வால் பிரகடனம் செய்யப்பட்டது.

அத்துமீறல்கள், படுகொலைகள், சட்டமீறல்கள் என்பன இன்றும் இஸ்ரேல்கடைப்பிடித்து வரும் மற்றும் அமுல் செய்து வரும் கொள்கைகளாக உள்ளன.அந்த வகையில் இஸ்ரேலின் வரலாறு என்பது குற்றங்களின், சதிகளின்,இரத்தக்களரியின், கொலைகளின், படுகொலைகளின், சட்டமீறல்களின் வரலாறாகவே உள்ளது.

இன்று உலகில் எந்தப் பகுதியில் வாழும் யூதர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் தமக்கு விருப்பமான எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் குடியேறலாம் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பிரதேசங்களின் பூர்வீக உரிமையாளர்களான பலஸ்தீனர்களோ தமது உரிமை கோரலுக்கான சட்டபூர்வமான ஆவணங்கள் மற்றும் தமது வீடுகளின் சாவிகள் கூட தம்மிடம் இருந்தும் அவற்றோடு அகதி முகாம்களுக்குள் அவல வாழ்வு வாழும் நிலல ஏற்பட்டுள்ளது.

சட்ட ரீதியான விடுபாட்டு உரிமை வழங்கப்பட்ட ஒரு பிரிவினரைப் போல் இஸ்ரேலியர்கள் தொடர்ந்தும் பலஸ்தீன மக்களை அன்றாடம் கொலை செய்து வருகின்றனர். அவர்களின் நிலங்களை தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.

அந்தக் காணிகளில் யூத குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவர்களில் அநேகமானவர்கள் அமெரிக்கா அரசுக்கு வரி செலுத்துபவர்கள்.பலஸ்தீனர்களின் வீடுகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. அவர்களின் பண்ணை நிலங்களும் ஏனைய வாழ்வாதாரங்களும் நாசமாக்கப்பட்டு வருகின்றன. பலஸ்தீன மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின் றனர். இஸ்ரேலிய சிறைகளில் இன்றைய நிலையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ் தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் பலஸ்தீனர்களை காஸா பகுதிக்குள் முடக்கி வைத்து அந்தப் பகுதி மீது எல்லாவிதமான தடைகளும் போடப்பட்டுள்ளன. மேற்குக் கரையிலும், காஸா பிரதேசத்திலும் கொடூரம் மிக்க இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் மனித குல வரலாற்றில் வேறு எங்கும் இதுவரை இடம் பெற்றிராத மனித குலத்துக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் மிகவும் கண் டனத்துக்கு உள்ளான நாடான இஸ்ரேலுக்கு எதிராக 120க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளதன் காரணமாக யூதர்களின் குற்றங்களுக்கு முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை செயல் இழந்து நிற்கின்றது. அரபு சர்வாதிகார ஆட்சியாளர்களும் இன்று பலஸ்தீனத்தை கைவிட்டு விட்டு யூதக் குற்றங்களை கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் நடுவே மேலைத்தேச ஊடகங்களால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் பலஸ் தீன மக்கள் மீது இன்று பரிதாபம் காட்ட எவரும் இல்லை இது தான் இன்றைய மத்திய கிழக்கு

 

முற்றும்.

லத்தீப் பாரூக்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...