2021 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லயோனல் மெஸ்சி தேர்வாகி உள்ளார்.
சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன்டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி பெற்றார்.கடந்த ஜூலை மாதம் கோபா அமெரிக்கா தொடரை அர்ஜென்டினா அணிக்கு மெஸ்சி வென்று தந்திருந்தார்.
நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளை கொண்டு மெஸ்சிக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டது.மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை Alexia Putellas தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றார்.