ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்!

Date:

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இரண்டு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்ஸில் பங்காளதேசம் லிட்டன் தாஸின் அபார சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் 91 ஓட்டங்களினால் 330 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது .தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஆபித் அலியின் 133 ஓட்டங்களினால் பாகிஸ்தான் 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆனால் பங்காளதேஷ் இரண்டாவது இன்னிங்சில் ஷாகின் அப்ரிடியின் அதிரடிப் பந்தில் ஈடுகொடுக்க முடியாமல்  5 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது .இதனையடுத்து 202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின்  ஆரம்ப வீரர் ஆபிட் அலி 91 ஓட்டங்களை விளாசினார்.

மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 73 ஓட்டங்களை எடுத்தார். இருவரும் ஆட்டமிழந்த பிறகு அசார் அலி (24), பாபர் ஆசம் (13) ஓட்டங்கள் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை நிலைநாட்டியது .

மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக 12 புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...