அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆண்டின் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதலாம் தவணை ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதற்கமைய 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள் , மாகாண கல்வி செயலாளர்கள் , மாகாண கல்வி செயலாளர்கள் , மாகாண வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் ,பிரிவேனாக்களுக்கும் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்