இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார்.
அங்கு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய நிதி அமைச்சரை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.