போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து தூதுவர் பேராசிரியர் எடம்ஸ் பராகுஸ்கி இலங்கையில் பால் உற்பத்தி சார்ந்த உற்பத்தி பொருட்களின் விஸ்தரிப்புக்காக போலாந்து முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போன்று போலந்து முதலீட்டு குழுவினர் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.