லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபத்தாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பள்ளிக்கு பரவியது. அந்த பள்ளியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகமான ஷெஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/12/10/explosion-south-lebanon-palestinian-camp

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...