சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ராணுவம் துளியும் ஈடுபடாது என்றும் அதுவரை ஆட்சியை ராணுவம் தான் வழிநடத்துமென ராணுவத் தளபதி அல் புர்கான் தெரிவித்துள்ளார்.
இதனை கண்டித்து தற்போதே தங்களுக்கு ஜனநாயக ஆட்சி வேண்டுமென என தலைநகர் கார்தோம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணியாக சென்றனர். அமைதியாக பேரணி செல்ல போடப்பட்ட உத்தரவை மீறியதாக தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி பொது மக்களை ராணுவத்தினர் கலைத்தமை குறிப்பிடத்தக்கது.