இவ்வாண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் தலைவர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் தலைமையில் இன்று(14) அட்டாளைச்சேனை கவிதாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது அரச உயரதிகாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இம்முறை அரச வானொலி விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர், ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கையின் வானொலி ஊடகத்துறையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அரச வானொலி விருது விழா-2021 அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவின்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலியில் சேவையாற்றி வரும் அறிவிப்பாளர் எம்.ஏ.றமீஸ் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டடு இவ்வாறு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஜே.எம்.சஜீத்)