நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (22) மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என குறித்த சபை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த காரணத்தினால் மின் தடை ஏற்பட்டது.