சாய்ந்தமருதில் கலாசார இலக்கிய பெரு விழா – 2021!

Date:

கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை ஆகியன இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் கலாசார இலக்கிய விழா நாளை வியாழக்கிழமை (23) பிற்பகல் 2.45 க்கு சாய்ந்தமருது கமு/கமு/அல் – ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். ஷபீகாவின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான எம்.எம்.ஆசிக்கின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.

மேலும் கௌரவ அதிதிகளாக கணக்காளர் என்.பி.எம். லரீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் மற்றும் விசேட அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் மற்றும் சிறப்பு அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித், கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், கலாசார அதிகார சபையின் உப தலைவர் ஏ.எச்.ஏ. பஷீர், கலாசார அதிகார சபையின் செயலாளர் கே.எம்.ஏ. அஸீஸ், கலாசார அதிகாரசபையின் பொருளாளர் எஸ்.எம். அஸ்வான் மௌலானா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில், இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ் விழாவில், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்,கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...