வறுமையில் வாடும் யெமன் மக்களுக்கு போதுமான உதவி வழங்க நிதி இல்லை – ஐ.நா சபை!

Date:

உள்நாட்டு போர் காரணமாக கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் யெமன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்க போதுமான நிதி இல்லை என ஐ.நா.தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஏமன் மக்களுக்கு உணவு வழங்கிட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், 2022 ஆம் ஆண்டு முழுவதும்  இதற்காக சுமார் 14 ஆயிரத்து 800 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் WFP என அழைக்கபடும் உணவு உதவி திட்டம் தெரிவித்துள்ளது.

யெமன் மக்களின் பசியை போக்க போதுமான நிதி இல்லாததால் வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 80 லட்சம் மக்களுக்கு குறைந்த அளவிலான உணவு வழங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.,தெரிவித்துள்ளது.

யெமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியா அரசின் துணையுடன் செயல்படும் யெமன் அரசுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக போர் நடந்து வருவது குறிப்படத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.bbc.co.uk/news/world-middle-east-59754152&ved=2ahUKEwiL49Gv9Pn0AhU2yzgGHbw3CCAQ0PADKAB6BAgsEAE&usg=AOvVaw0qjgdaGLRR46hKRUGqqw6-

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...