இரண்டாவது முறையாக LPL சம்பியன் பட்டத்தை வென்றது ஜப்னா கிங்ஸ்!

Date:

2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்த ஜஃப்னா கிங்ஸ் அணி 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் சமித் படெல் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந் நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக தனுஸ்க குணதிலக்க 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், சதுரங்க டி சில்வா 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, ஜஃப்னா கிங்ஸ் இரண்டாவது முறையாகவும் லங்கா பிரிமியர் லீக் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...