“புனித அல் குர்ஆனில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி 25 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரின் தாயார் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பற்றி அல் குர்ஆனில் 34 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு குறித்து புனித அல் குர்ஆனின் ஸூரா ‘ஆல இம்ரான்’ (அத்தியாயம்: 3) மற்றும் ஸூரா ‘மர்யம்’ (அத்தியாயம்: 19) ஆகிய அத்தியாயங்களில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் காணப்படும் உயர்வையும் அந்தஸ்த்தையும் குறித்துக் காட்டுகின்றது.”