அரச உத்தியோகத்தர்களுக்கு அக்ரஹார காப்புறுதி உதவி கொடுப்பனவு! 

Date:

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22,000 பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் என காப்புறுதி நன்மைகளை பெறுவதற்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுள் 22,000 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனையோருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலை அல்லது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மாத்திரம் அக்ரஹார காப்புறுதியை பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...