சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!

Date:

கொவிட் பரவலை கட்டுப்படுத்த சீனா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வரும் நிலையில், பல நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந் நாட்டில் உள்ள சியான் நகரத்தில் தற்போது கடும் ஊரடங்கு அமலாகியிருக்கிறது. போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக குடும்பத்தில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாளைக்கு ஒருமுறை வெளியே வர அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு கடும் கட்டுபாடுகள் இருப்பினும், சியான் நகரில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே, சீனாவின் பல இடங்களில் சுகாதாரத்துறையினர் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://amp.scmp.com/news/china/politics/article/3161716/china-curbs-new-years-eve-celebrations-reduce-covid-19

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...