இந்த வருட ஆரம்பத்தை முன்னிட்டு கம்பளை பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பளை வலயத்தில் வறுமை கோட்டின் கீழ் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு Eclat unit அமைப்பின் தலைவர் இஹ்திஷான் முஹம்மட் மற்றும் JJ Foundation அமைப்பின் தலைவர் ஹனீப் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அம் மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்கள் சீருடைகள் மற்றும் சப்பாத்துக்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கம்பளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது கம்பளை பொலிஸ் பிரமுகர்களும் அதே போன்று அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் இதன் போது Eclat unit அமைப்பின் தலைவரின் உரையில் பொலிஸ்கும் மற்றும் மக்களிடையேயான சுமுகமான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து, Eclat unit அமைப்பின் ஸ்தாபக தலைவர் இஹ்திஷான் முஹம்மட் மற்றும் JJ அமைப்பின் தலைவர் டொக்டர் ஐ.வை.ம்.ஹனீப் ஆகியோரின் தலைமையின் கீழ் இணைந்து வருட ஆரம்பத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம் ஒன்றை கம்பளை ஸாஹிரா கல்லூரி, கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் வட்டதெனிய ஹவுஸ் ஒப் ஹோப் இல்லத்தில் நடத்தியது. இதன் போது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.