கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது .இது தவிர கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.