சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்!

Date:

கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (06) பிற்பகல் பார்வையிட்டார்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிறைக்கூடமாக விளங்கி, பின்னர் விளக்கமறியல் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும், பழங்கால அரண்மனைத் திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புனரமைப்புப் பணிகளை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். தியவடன நிலமே நிலங்க தேல அவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...