ஸ்ரீ லங்கா அமரபுர பிரதான சங்க சபையின் பிரதான செயளாலர் கௌரவ பேராசிரியர் பல்லேகன்த ரதனசார பதில் மஹா நாயக்க தேரரின் நேற்று (07) பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத் தலைவர்களான கௌரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.