நாட்டில் இன்றைய தினம் (11) எப் பகுதியிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த போதும் மின்சார சபையின் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே பகுதிகளில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.