கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையான நிலையை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
எனவே வட அகலாங்குகள் 04 N – 10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ் விடயம் தொடர்பாக மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
வளிமண்டலவியல் திணைக்களம்