இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

Date:

கல்வி வெளியீட்டு ஆணையாளர் பீ.என் அயிலப்பெரும அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி சுற்றறிக்கையில், இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்  தரம் 6,7 ,10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்குரிய தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உள்ள இஸ்லாம் பாடநூல்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அப் பாடநூல்களைப் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக விநியோகப்பட்டிருப்பின அப் பாடநூல்கள் மாணவர்களுக்கு அவற்றை  பாடசாலைக் களஞ்சியத்திற்குத் திருப்பி பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கல்வி அமைச்சினானது சமய பாட நூல்களை திருத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...