ஹட்டன் டிக்கோயாவில் 72 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து!

Date:

ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்திலுள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.

15 பேர் சென்ற இப் பேருந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...