காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட, சமூக சேவையாளர், சட்டத்தரணி. அப்துல் ஜவாத் அவர்கள் மறைவு!

Date:

காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்கள் இன்று(02) காலமானார்.அன்னாருடைய சேவேகள் குறித்து,

பல்வேறு தரப்புக்களில் செய்திகளும் அனுதாபங்களும் தெரிவிக்கப் படுகின்ற இவ்வேளையில், காத்தான்குடியை சேர்ந்தவரும் ,பிரபல அரசியல்வாதியும், முன்னாள் ஆளுனருமான எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்கள், மறைந்த ஜவாத் சேர் குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

மர்ஹூம் ஜவாத் அவர்கள் மிகவும் நேர்மையாகவும்,நீதியாகவும் சமூகப் பணியாற்றியதோடு இந்த சமூகத்திற்காகவே வாழ்ந்த ஒருவராகவும், இலங்கை முஸ்லீம்களுடைய அரசியல் வரலாற்றில் புதிய கட்சியினூடாக முஸ்லிம் சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்குவதில் மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் சேருடன் தனது ஆழ்ந்த கருத்துக்களையும் அறிவையும் பகிர்ந்து அக்காலத்தில் அக்கட்சியினை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டவர் ஆவார்.

அப்துல் ஜவாத் சேர் அவர்கள் காத்தான்குடியில் பள்ளிவாயல்கள் சம்மேளன நிருவாகங்கள் ஒன்றுபட்டு நடப்பதிலும், அமைதியை நிலை நாட்டுவதிலும், இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் குறிப்பாக தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்புவதிலும் அந்த உறவின் ஊடாகத்தான் மக்கள் ஒற்றுமையாகவும்,நிம்மதியாகவும் வாழ முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் 1994 ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் இணைந்து காத்தான்குடியின் அபிவிருத்தியில் இரவு பகலாக ஒத்துழைப்பு வழங்கிய ஒரு அரசியல் தலைமைத்துவம். காத்தான்குடியின் அபிவிருத்திக்கு தனது ஆலோசனைகளையும் , ஒத்துழைப்பையும் , வழிகாட்டுதல்களையும் வழங்கியவர். அவரது அனுசரணையோடு இந்த பணிகளை செய்ததன் ஊடாக மொத்த ஊர் மக்களும் தமது ஆதரவை தந்ததாக முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.

மறைந்த அப்துல் ஜவாத் சேரின் ஜனாஸா இன்று காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...