கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று (09) 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று மாலை 04.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் பிரதேசங்களாக,ஏகல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தை, நீர்கொழும்பு வீதி, வஹட்டியாகம, தலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கடான தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும் உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடையின் சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.