நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 11 இலட்சம் பேர் கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை!

Date:

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடையில் உள்ள இளைஞர், யுவதிகள் 719,000 பேரும் 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் 3 இலட்சத்து. 86 ஆயிரத்து 408 பேரும் இதுவரை கொவிட் தடுப்பபூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டிலே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 234 பேர் எந்தவொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையான கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்காதிருப்பதான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...