மூன்றாவது டி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வி; தொடரை கைப்பற்றியது ஆஸி!

Date:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக, அணித் தலைவர் தசுன் சானக்க 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந் நிலையில், 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக, கிளேன் மெக்ஸ்வெல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி தொடரை 3 -0 என்ற அடிப்படையில்  கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...