பிரேசிலின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் பெய்த கன மழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.மேலும், காணமல் போன 126 பேரைக் தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.