பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார்.
1999 ஆம் ஆண்டின் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளார்.இதன்போது பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.