ஊடகத்துறைக்கு அளப்பரிய பங்காற்றியவர் கமல் லியனாரச்சி;முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்!

Date:

நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாரச்சியின் மறைவு ஊடகத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

கமல் லியனாரச்சியின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது,

அத்த, லக்பிம பத்திரிகைகளின் ஊடகவியலாளராகப் பணிபுரிந்து இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்ட பின் அதன் சிங்கள மொழிமூலம் முறைப்பாட்டுப் பொறுப்பதிகாரியாகப் பதவியேற்று சிறிது காலம் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றினார்.

அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பத்திரிகைப் பேரவைக்குப் பதிலாக மேற்கு நாடுகளில் இருப்பது போன்று இலங்கையில் பத்திரிகைத் தொழில் துறையினரின் கண்காணிப்பில் இயங்கும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் வளர்ச்சியில் கமல் லியனாரச்சியின் பங்களிப்பு வரலாற்றில் எழுதப்படும் ஒன்றாகும்.ஊடகவியலாளர்களது அறிவினை மேம்படுத்துவதற்காக நாட்டின் நாலா புறங்களிலுக்கும் விஜயம் செய்து நூற்றுக்கணக்கான விரிவுரைகளை நடாத்தி இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், பல வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உத்தியோகத்தர் தெரிவுத் தேர்தல்களை நடாத்தும் பிரதம தேர்தல் உத்தியோகத்தராகவும் பணிபுரிந்து எமது பணிகளுக்கு உதவியதை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.சிங்கள, தமிழ், முஸ்லிம் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் பாலமாக செயற்பட்ட கமல் எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணநல மிக்கவராகவும் காணப்பட்டார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...